அண்ணாமலைக்கு போட்டியாக தமிழக காங்கிரஸ் தலைவராகும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி?

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (08:49 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி விரைவில் மாற்றப்பட இருப்பதாகவும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
2024 ஆம் தேதி ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகம் உள்பட பல்வேறு மாநில தலைவர்களை மாற்ற தேசிய தலைவர் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் தலைவர்கள் மாற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக அண்ணாமலையை சமாளிக்கும் வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்