பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீதான வழக்கு....2 வாரம் அவகாசம் கேட்ட அரசு

வியாழன், 8 ஜூன் 2023 (19:15 IST)
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீஸார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்ததுடன், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது..

இவ்வழக்கில் தொடர்புடைய  நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில்,  ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ரூசோ அளித்த வாக்கு மூலத்தின்படி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் பற்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்  லுக் அவுட் நோட்டடீஸ் அனுப்பினர்.

அதன்பின்னர்,  தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ்,  ''திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக மட்டுமே ஆருத்ரா நிறுவன இயக்குனர்களுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், ஆனால், மோசடிக்கும் எனக்கும் சம்பம்தம் இல்லை'' என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையோடு போலீஸார் அனுப்பி சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் 2 வாரம் அவகாம் கேட்டார். இதையேற்ற நீதிமன்றம் இரண்டு வாரங்கள் தள்ளி வைத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்