ஆட்டோ வாங்க 1 லட்சம் மானியம், உதவித்தொகை அதிகரிப்பு..! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் என்னென்ன?

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (10:06 IST)
இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் புதிய திட்டங்கள் சிலவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



இன்று நாட்டின் 77வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் தமிழகத்திற்கு சில புதிய திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார்.
  • அவையாவன, பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு “விடியல் பயணம்” என பெயர் சூட்டப்படுகிறது.
  • ஓலா, ஸ்விக்கி, ஊபர், ஸொமெட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.
  • பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானிய வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவரும் பயன்பெறும் வகையிலும் விரிவுப்படுத்தப்படும்.
  • சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே 6.9 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்