இந்தியா செய்த சாதனை என்ன? சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:17 IST)
இன்று நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பேசியுள்ளார்.



இன்று நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நிகழ்வில் பேசிய அவர் “இந்தியாவ்ன் வளர்ச்சியில் இளைஞர்கள் தங்களது முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றனர். புத்தாக தொழில் துறைகளில் இந்தியா முதல் 3 இடங்களில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பலமே நம்பிக்கைதான். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை புதிய நம்பிக்கையுடன் பார்க்கிறது.

கொரோனா காலத்துக்கு பிறகு உலகமே மாறிவிட்டது. டிஜிட்டல் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. நவீன மயமாக்கலை நோக்கி தொடர்ந்து இந்தியா நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமல்லாமல் ஜனநாயகமும், பன்முகதன்மையும் நாட்டின் பலமாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்