தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!- அமைச்சர் சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:34 IST)
இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு ம்த்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, .தமிழகத்தில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென  மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவரக்ளைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இன்று மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் நாட்டில் புதிதாக பிஏ4 தொற்று 4 பேருக்கு பிஏ5 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது உருமாறிய கொரொனாவால பாதிகபப்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்