ரூ.30 லட்சம் கடன் வாங்கி....ஆன்லைன் ரம்மி விளையாடிய ஐடி ஊழியர் தற்கொலை

திங்கள், 6 ஜூன் 2022 (15:22 IST)
சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி ஆன்லைன் ரம்பி விளையாட்டிற்கு ரூ.30 லட்சம் கடன் வாங்கி அதில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அலுவலத்திற்கு ரயிலில் செல்லும்போது, பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்பி விளையாடி வந்துள்ளார். பின்னர், அந்த விளையாடிற்கு பவானி அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டிற்காக அவர் தன் 20 சவரன் நகையை விற்றதோடு, சகோதரியிடம் ரு.30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளர்.

இதில் ஏற்பட இழப்பு காரணமாக மனமுடைந்த பவானி தன்வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்