மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி தேர்வு

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (08:57 IST)
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு. 
 
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். 292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
2019 ஆம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர். மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்