வங்க கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மீன்கள் வரத்து குறையும் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை தொடங்கு குமரி வரை கரையோர மாவட்டங்களில் மக்கள் பலர் மீன் பிடிப்பதை தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக உள்ள நிலையில், அந்த சமயங்கள் மீன்பிடிப்பது மீன் இனப்பெருக்கத்தையும், வரத்தையும் பாதிக்கும் என்பதால் ஆண்டுதோறும் அந்த சமயங்களில் மீன்பிடித் தடைக்காலம் விதிக்கப்படுகிறது.
அவ்வாறாக இந்த ஆண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஜூன் மாதம் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் எந்திர படகுகளில் ஆழ்க்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி கிடையாது.
ஆனால், 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்க தடை இல்லை. இந்த அறிவிப்பை தொடர்ந்து விசைப்படகுகள் கடலில் இருந்து கரைக்கு திரும்பியுள்ளன. மேலும் இந்த காலக்கட்டத்தில் கடல் மீன்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் மக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Edit by Prasanth.K