8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

Mahendran

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (12:40 IST)
நெல்லை மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவனை, சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியதாகவும், அதை தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில், இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் திடீரென அரிவாளை எடுத்து, சக மாணவனை வெட்டியதாகவும், இதை தடுக்க வந்த ஆசிரியருக்கும் அறிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெறுகிறார். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளி வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஒரு மாணவர், மற்றொரு மாணவரிடம் பென்சில் கேட்டதாகவும், பென்சில் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன் அரிவாளால் தாக்கியதாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
ஆசிரியருக்கும் படுகாயம் ஏற்பட்டதால், அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக்குள் அரிவாளை ஒரு மாணவன் எப்படி கொண்டு வந்தான் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்