திம்பம் பகுதியில் கனமழை; திடீரென உருவான அருவி! – மக்கள் ஆச்சர்யம்!
வியாழன், 21 அக்டோபர் 2021 (13:12 IST)
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் புதிய அருவி உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் திம்பம் மலை அமைந்துள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை தமிழக – கர்நாடகா இடையே போக்குவரத்து பாதையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் 27வது கொண்டை ஊசி வளைவு அருகே மலைப்பாதையில் புதிய அருவி உருவாகியுள்ளது. அந்த பாதையில் பயணிக்கும் பயணிகள் இந்த அருவியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.