கோயம்புத்தூர் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஐஸ்க்ரீம் கடை ஒன்றில் மதுவகைகளை கலந்து புதிதாக போதை ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சோதனை செய்த அவர்கள் மதுபாட்டில்களை கண்டுபிடித்ததோடு கடைக்கும் சீல் வைத்துள்ளனர்.