தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் தரமான உணவை மலிவு விலையில் பெறும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் சிலவற்றில் சமீப காலமாக இரவு நேரத்தில் சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்த நிலையில் விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி, அம்மா உணவகங்களில் சப்பாத்தி செய்ய தேவையான கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் வாங்கப்பட்டு தனியார் ஆலைகளில் அரைக்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட இயந்திட கோளாறு காரணமாக சென்னையில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அதற்கு மாற்றாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. விரைவில் மீண்டும் விரைவில் சப்பாத்தி வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளது.