மீண்டும் வருகிறதா நியூட்ரினோ ஆய்வு மையம்? – புதிய அரசாணையால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (10:47 IST)
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில் வெளியாகியுள்ள புதிய அரசாணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மக்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது குறித்து மத்திய சுற்றுசூழல் மேற்கொண்ட ஆய்வில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடம் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லைக்குள் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள இடம் கேரள எல்லைக்கும் உட்பட்டு இருப்பதால் கேரளா அனுமதி அளித்தால் நியூட்ரினோ பணிகள் தொடங்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்