நானே போராடியிருப்பேன் ; வாய் விட்ட ரஜினி : வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (11:19 IST)
கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள விவகாரம் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
 
தென்னிந்திய சினிமா சங்கம் சார்பாக மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பேசிய ரஜினி “மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன்” எனப்பேசினார்.
 
ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாடே சுடுகாடு ஆகிவிடும்” என ரஜினி கூறியது அப்போதே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ரஜினியின் கருத்தை சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டித்திருந்தனர்.

 
தற்போது நானே போராடியிருப்பேன் என ரஜினி கூற அவரின் கருத்தை கிண்டலடித்து பல மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.






தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்