ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் கூறுகிறேன் நீட் தேர்வு அவசியம் என புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றனர்
இந்த நிலையில் நீட் தேர்வு உண்டு என புதுவை மாநில கல்வி துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியபோது மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன் நீட்தேர்வு அவசியம் தேவை. மருத்துவக்கல்லூரி உரிமையாளர்களின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்று அவர் கூறினார்
தமிழிசை அவர்களின் இந்த பேச்சுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது