தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் நிலையில், புதிதாக ஆட்சியமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தார்.
தமிழகம் முழுவதும் பலர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு இமெயில் உள்ளிட்டவற்றின் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் பேரின் கருத்துகளை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் ஆய்வு குழு நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த 165 பக்க ஆய்வறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன் “பெறப்பட்ட மனுக்களில் அதிகமாக நீட் தேர்வுக்கு எதிராகவே பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.