உளவு பார்க்கவே நடராஜன் அப்பல்லோவில் அட்மிட்: அதிமுக முன்னாள் அமைச்சர்

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:20 IST)
உளவு பார்க்கவே நடராஜன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி தெரிவித்துள்ளார்.


 


சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டதை அடுத்து இரவு 7 மணி அளவில் நடராஜன் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதன் பின்னர் அப்பல்லோ இயக்குநர் பிரதாப் ரெட்டி, நாளை பிற்பகல் ஜெயலலிதா சிகிச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெறும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறார்.

நடராஜன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதற்கும், ஜெயலலிதா சிகிச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு அறிவிப்புக்கும் சம்பந்தம் உள்ளது என பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

ஜெயலலிதா மறைந்து 60 நாட்களில் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கு சசிகலா வந்திருப்பதில் சதி இருக்கிறது. நடராஜன் உடல்நிலை சரியில்லை என்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உளவு பார்க்கவே என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்