துப்பாக்கி முனையில் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் - அதிமுக பிரமுகர் பேட்டி (வீடியோ)

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:12 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக பொருளாலராக தேர்ந்தெடுக்க கூடிய பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மிரட்டி பணிய வைக்கப்பட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், கடந்த டிசம்பர் 29ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. அதில், 280 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 2,770 பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அந்த கூட்டத்தில்தான், சசிகலா பொதுசெயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் டிசம்பர் 31ம் தேதி, அவர் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில், டிச.29ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தங்களை மிரட்டி கொண்டு சென்றனர் என, சென்னை எழும்பூர் பகுதி அதிமுக செயலாளராக உள்ள மகிழன்பன் விகடன் இதழுக்கு பகீர் பேட்டியளித்துள்ளார்.
 
அதில், தங்களை துப்பாக்கி முனையில்  பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றனர் என்றும், எங்களில் யாருக்கும் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிப்பதில் உடன்பாடு இல்லை எனவும் கூறியுள்ளார். அவரின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நன்றி - விகடன்
அடுத்த கட்டுரையில்