நற்றமிழ்ப் பாவலர் விருது ! பாராட்டு விழா !

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (21:14 IST)
கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் அண்மையில் தமிழ்நாட்டரசின் "நற்றமிழ்ப் பாவலர் " விருது - தங்கப் பதக்கம் , ஐம்பது ஆயிரம் பணமுடிப்புப் பெற்ற பாவலர் ப.எழில்வாணன் அவர்களுக்கு பாராட்டு விழா 15 11. 2023 , மாலை கருவூரில் நடைபெற்றது.
 
முனைவர் கடவூர் மணிமாறன் தலைமை தாங்கினார்.சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. திருக்குறள் பேரவை செயலர் மேலை பழநியப்பன் பாவலர் ப. எழில்வாணன் பண்பு நலன்களை படைப்புச் சிறப்புகளை எடுத்துரைத்து சிறப்புச் செய்து பாராட்டினார்.
 
கடவூர் மணிமாறன் ப. எழில்வாணன் அவர்களின் 40 ஆண்டு தமிழ்ப் பணியை பல்வேறு இதழ்களில் தென்மொழி போன்ற இதழ்களில் படைப்புகளை வெளியிட்டமையை பாராட்டினார்.
 
கவிஞர் இனியன் , கவிஞர் முகன் , கவிஞர் வையாபுரி கவிதை வாசித்து பாராட்டினர்
முனைவர் அழகர் ப. எழில்வாணன் அவர்களின் யாப்பு இலக்கண நூல் சிறப்பை எடுத்துரைத்து பாராட்டினார்.
 
லயன் ஜெயா பொன்னுவேல், திருமூர்த்தி , பொன்னி சண்முகம் கெளசிக் பாபு , தென்னிலை கோவிந்தன் , க. ப . பாலசுப்பிரமணியன் மெய்யப்பன் , லயன் ராமசாமி , லயன் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்துரைத்தனர். ப. எழில்வாணன் ஏற்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்