செவ்வாயில் பெருக்கெடுத்து ஓடிய ஆறு! கண்டுபிடித்த பெர்சவரன்ஸ்! – புகைப்படங்கள் வைரல்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:08 IST)
செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் இருந்ததற்கான தடத்தை நாசா விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.

சமீப ஆண்டுகளில் உலக நாடுகள் பல செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் என்ற அதிநவீன விண்கலம் மற்றும் ரோவரை செவ்வாய்க்கு அனுப்பினர்.

பெர்சவரன்ஸ் அங்கு எடுத்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. அதில் சில புகைப்படங்களில் ஆற்றுப்படுகை போன்ற அமைப்பு காணப்படுகிறது. தொடர்ந்து நீர் நிலைகளில் படிப்படியாக நீர் குறையும்போது ஏற்படும் அரிப்புகளாலான வரிவரியான பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை நாசா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இது செவ்வாய் குறித்த ஆய்வில் மேலும் முன்னேற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்