விண்வெளிக்கு மக்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்! – உலகமே வியந்து பார்க்கும் சாதனை!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (13:49 IST)
உலகிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் தவிர பொதுமக்கள் யாரும் இதுவரை விண்வெளி சென்றதில்லை. இந்நிஅலியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முதற்கட்டமாக நான்கு பொதுமக்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ். நேற்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட்ட பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்துள்ளது. 3 நாட்கள் பூமியின் வட்டப்பாதையில் சுற்றிவிட்டு ப்ளோரிடா கடற்கரை அருகே விண்கலம் தரையிரங்கும் என கூறப்பட்டுள்ளது. விண்வெளி பயண வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்