கவிழும் நிலையில் புதுவை காங். ஆட்சி?

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:34 IST)
புதுவையில் இன்று காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் அவருடைய ஆட்சி தப்புமா அல்லது கவிழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 
புதுவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து 5 பேர் ராஜினாமா செய்தனர் என்பதும் திமுக எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் மொத்தம் உள்ள 33 உறுப்பினர்களில் தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 12 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தந்துள்ளனர். 
 
எனவே இன்றைய வாக்கெடுப்பின் போது 17 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அவருடைய ஆட்சியை தப்பிக்கும் என்பதும் இல்லையேல் ஆட்சி கவிழும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், புதுவையில் மேலும் 2 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால் ஆளும் காங்., அரசு முற்றிலும் பெரும்பான்மையை இழந்துவிட்டது. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்