வெங்கடாஜலபதி (ரஜினி) மார்கெட் போச்சு; அத்திவரதர் (விஜய்) அடிச்சிட்டாரு... கொளுத்தி விட்ட சீமான்!!

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:43 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை திருப்பதி வெங்கடாஜலபதி எனவும், விஜய்யை அத்திவரதர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
சமீபத்தில் சுங்குவார் சத்திரம் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி மற்றும் விஜய் குறித்து பேசினார். சீமான் பேசியது பின்வருமாறு... 

அத்திவரதர், அத்திவரதர், அத்திவரதர்னு எல்லா தொலைக்காட்சியை பார்த்தாலும் அத்திவரதர்தான். ஆனா கடைசியா நயன்தாராவும், ரஜினியும் குட்பாய் சொல்லி அனுப்பி வைத்து அவர் இவ்வளவு நாள் எவ்வளவு பெருமைக்குறியவராக இருந்தாரோ அவ்வளவும் சிறுமைப்படுத்தி ஆக்கிட்டீங்க. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? 
ஆனால், ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் அத்திவரதரால் வெங்கடாஜலபதிக்கு மார்கெட் போச்சு. 48 நாட்களில் நம்ம ஆளு அத்திவரதர் திருப்பதிய அடிச்சிட்டாருன்னு சொன்னாங்க. ரஜினிகாந்தை வீழ்த்தி தம்பி விஜய் வர்றது மாதிரி இதுவும் ஒரு பெருமைதான் நமக்கு என்று பேசியுள்ளார். 

சீமானின் இந்த பேச்சு நடிகர் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்