ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கும்பாபிஷேகத்தின் போது ஷீரடி சாய்பாபாவின் சிலை மாயமான சம்பவம் நடந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள கொளாநல்லி நடுப்பாளையம் என்ற பகுதியில் வசிக்கும் சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒரு குடிசைப்பகுதியில் சாய்பாபா சிலையை வைத்து தினமும் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், அதே இடத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கருவறையில் 8 அடி உயரத்திற்கு பளிங்கு கல்லால் ஆன ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
இக்கோயிலில் இன்று சாலை கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் தங்கள் செல்போனில் ஷீரடி சாய்பாபாவை புகைப்படம் வீடியோ எடுத்தனர். அப்போது, செல்போன், வீடியோவில் ஷீரடி சாய்பாவின் சிலை மறைந்திருந்தது.
சாய்பாபாவின் கழுத்தில் இருந்த மாலை மட்டும் பதிவாகி இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் புகைப்படம் எடுத்தபோது, அதில், ஷீரடி சாய்பாவில் புகைப்படம் பதிவானது. இதனால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.