ஓபிஎஸ் அணியில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ்?: மாஃபா பாண்டியராஜன் அழைப்பு!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (08:59 IST)
அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழக அரசியலை சுனாமியாக சுழற்றி அடிக்கிறது. அடுத்த முதல்வர் சசிகலாவா? பன்னீர்செல்வமா? என்பதை நிரூபிக்க இருவரும் நேருக்கு நேர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.


 
 
சசிகலாவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஓபிஎஸ்-க்கு ஆறு எம்எல்ஏக்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர். மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் அவரது தொகுதியில் இருக்கிறார்.
 
இந்நிலையில் நடராஜ் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பன்னீர்செல்வத்தின் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சரும் ஆவடி தொகுதி பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏவான மாஃபா பாண்டியராஜன்.
 
எம்எல்ஏ நட்ராஜை சந்தித்த பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மைலாபூர் எம்எல்ஏ நட்ராஜ் அவர்களை சந்தித்தேன். இதுவரை தனது ஆதரவை யாருக்கும் வழங்காமல் நடுநிலையான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்திருந்த அவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்கிறேன் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்