இல்லம் தேடி கல்வி திட்டத்தால் விபரீதம் ஏற்படலாம்: சிபிஐ முத்தரசன் எச்சரிக்கை!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (19:24 IST)
இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி என்ற திட்டட்தால் விபரீதம் ஏற்படலாம் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் இடையில் கல்வியை நிறுத்திய மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சிபிஐ தமிழக மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் ’இல்லம் தேடி கல்வி திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ஷாகாக்கால் மூலம் சங்பரிவார் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்