64 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் துண்டிப்பு!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (17:43 IST)
இந்தியாவில் மோசடியாகப் பெறப்பட்டிருந்த சுமார் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மத்தியில்  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆதார் அடையாள அட்டை  எல்லோரும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் உதவித் திட்டம், செல்போன் சிம் கார்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு  நடவடிக்கைகளுக்கு ஆதார் முக்கியமாக தேவையாக உள்ளது.

இந்த நிலையில், ஆதார் அட்டையை வைத்து 9 இணைப்புகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் ஒருசிலர் ஆயிரக்கணக்கான  இணைப்புகள் பெற்றிருந்ததால் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,  இந்தியாவில் மோசடியாகப் பெறப்பட்டிருந்த சுமார் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்