கொரோனாவால் பாதித்தோர் மாரடைப்பைத் தடுக்க, தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்- ICMR ஆய்வில் தகவல்

திங்கள், 30 அக்டோபர் 2023 (14:05 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு  சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது.

இதனால், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இத்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல நடவடிக்கைகள் எடுத்து,  மருத்துகள், நோய் தடுப்பு   ஊசிகள் வழங்கின.

இத்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் எதாவது பாதிப்புகள் வருமா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், கொரொனாவால் பாதித்தோர் மாரடைப்பை தடுக்க தீவிர உடற்பயிற்சிககளைத் தவிர்க்க  வேண்டும் என ஐ.சி.எம்.ஆர் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடுமையான கொரொனா தொற்றால் பாதிக்கப்பவர்கள் மாரடைப்பு வராமல் இருக்க குறைந்தபட்சம் ஓரிரு வருடங்கல் உடல் ரீதியாக அதிக வேலைகள் மற்றும் அதிக உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர்  ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்