அரிசி - சர்க்கரைக்கு பதில் பணம்: வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (11:20 IST)
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி மற்றும் சக்கரை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அரிசி சர்க்கரைக்கு பதில் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு புதுச்சேரியில் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு அரிசி சர்க்கரை கொடுப்பதற்கு பதிலாக பொதுமக்களின் வங்கி கணக்கில் அதற்கு ஈடான பணம் செலுத்தப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பணம் கொடுக்கப்படுவதாகவும் அந்த பணத்தை வைத்து மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்
 
தமிழகத்தில் பொங்கல் பரிசாக அரிசி சர்க்கரை கரும்பு ஆகியவை கொடுத்து வரும் நிலையில் இதே போன்று பணமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்