ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா பிரதமர் மோடி?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:37 IST)
பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் கசிந்துள்ளது 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க பாஜக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகள் தயாராகி வருகின்றன
 
ந்த நிலையில் பிரதமர் மோடி வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அவற்றில் ஒன்று ராமநாதபுரம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.யு
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மற்றும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஆகிய 2 தொகுதியில் மோடி போட்டியிடுவார் என்றும் இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றால் ராமநாதபுரம் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வாரணாசி தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
 
கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இராமநாதபுரம் முக்கியத்துவம் கொடுக்கும் நகரம் என்பதால் அவர் அங்கு போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை பிரதமர் மோடி இராமநாதபுரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக கூட்டணி வேட்பாளரை நிறுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்