பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்: அதிரடியாக அறிவித்த அமித்ஷா

சனி, 31 டிசம்பர் 2022 (18:44 IST)
தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட தயாரா என முதல்வர் முக ஸ்டாலின் இன்று சவால் விடுத்த நிலையில் கர்நாடகாவில் பாஜக தனித்து போட்டியிடும் என சற்றுமுன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரசைப் பொருத்தவரை அதிகாரத்தை பெறுவது ஊழலை செய்வதற்கான ஒரு வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எங்களை பொறுத்தவரை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் எங்கள் கொள்கை என்றும் சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தலில் 5 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றும் ஆனால் ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்து உள்ளது என்றும் அமித்ஷா கூறியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்