மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் பல்வேறு துறைகளிலும் தீவிர மாற்றங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்யவும், ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா, சிறு துறைமுகங்களில் மாநில அரசுகளின் நீண்டகால உரிமைகளை பறிக்கிறது என 9 கடலோர மாநில முதல்வர்களுக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.