பீட்டாவுக்கு அனுமதி வழங்கியதே ஆ.ராசா தான்: இப்போ தடை கேட்கிறார் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (18:42 IST)
ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடாது, அதில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.


 
 
இந்நிலையில் இந்த வருடம் கொதித்தெழுந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்தினர்.
 
கடந்த சில தினங்களாக பீட்டா அமைப்பை பற்றி பலரும் விமர்சித்து வருகின்றன. அந்த அமைப்பு வெளிநாட்டு கைகூலி எனவும் இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னர் மிகப்பெரிய சதி உள்ளது என விமர்சனங்கள் வருகின்றன.

 
திமுக போன்ற கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தின. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 
ஆனால் பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் அனுமதி வழங்க உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்ததே திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்