188 புதிய அவசரகால ஊர்தி சேவை துவக்கம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:27 IST)
188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்துள்ளார். 

 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
திமுகவின் அமோக வெற்றியை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி, ஆ ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.  
 
வெற்றி கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு ஸ்டாலின் இன்று தனது அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, செங்கல்பட்டு சித்தாலம்பாக்கத்தில் 188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
 
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மருத்துவ பெட்டகத்தை வழங்கிய பின்னர் 108 அவசர ஊர்தி போல இந்த புதிய 188 அவசரகால ஊர்திகளின் சேவையை பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்