தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 26.95 கோடி செலவில் 2 திட்ட பணிகள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:42 IST)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில்  ரூ.769.97 கோடி செலவிலான 103 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.1192.45 கோடி மதிப்பீட்டிலான 30 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
 
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 10.73 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நகர மாநாட்டு மைய கட்டடத்தையும், ரூ. 16.22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாக கட்டடத்தையும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்  முடிவுற்ற திட்ட பணிகளான நகர மாநாட்டு மைய கட்டடத்தையும், வணிக வளாக கட்டடத்தையும் அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
          
இந்நிகழ்ச்சியில்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்