”கடன் வாங்கி கமிஷன் பாத்த முதல்வர்” – புறக்கணிப்புக்கு பதில் சொன்ன ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (12:56 IST)
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக வெளிநடப்பு செய்த நிலையில் அதுகுறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக கூட்டத்தொடரை புறக்கணித்து வெளியேறியது. இதுகுறித்து பேசியுள்ள மு.க.ஸ்டாலின் ”பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை வைத்துள்ளது அதிமுக அரசு. 10.9 சதவீதமாக இருந்த மாநில தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடன் வாங்கி கமிஷன் அடித்த முதல்வருக்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்