எதிர்க்கட்சிகளை ஏசுவதால் ஒன்னும் நடக்காது: ஸ்டாலின் காட்டம்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (15:01 IST)
ஜூன் மாத பொதுமுடக்கத்திலாவது கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் முயற்சிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,149 பேர்களில் சென்னையில் மட்டும் 804 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.   
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1798, தேனாம்பேட்டையில் 1662, தண்டையார்பேட்டையில் 1661, அண்ணா நகரில் 1237, அடையாறில் 834, வளசரவாக்கத்தில் 871 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 
 
இந்நிலையில் ஜூன் மாத பொதுமுடக்கத்திலாவது கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் முயற்சிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த எதிர்க்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எந்த பயனும் ஏற்படாது எனவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்