இந்த நிலையில், நேற்று புத்தாண்டில் மட்டும் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும், ராமர் கோவில் வருவதற்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற ஆரத்தியில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தார்கள் என்றும், அதன் பின்னர் புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு அதிக அளவில் வருகை தந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.