படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (12:20 IST)
திருடர்களை துரத்தி சென்றபோது படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை அருகே கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றை விரட்டி சென்றுள்ளார்.

அப்போது அந்த திருட்டு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் பூமிநாதன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்