ஆகஸ்டு 1 முதல் அட்மிசன் தொடக்கம்; கல்லூரி திறப்பு எப்போது? – அமைச்சர் பொன்முடி தகவல்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (12:08 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்லூரிகள் முழுமையாக செயல்படாமல் உள்ளன, இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் பொன்முடி ”தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் முடிவு செய்வார். ஆனால் திட்டமிட்டபடி ஆகஸ்டு 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்