மருத்துவர்கள் மேல் கை வைத்தால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (09:54 IST)
தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நோயாளிகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேர்ந்தால் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்