1951 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் பாதாள பைரவி. இதில் என் டி ராமராவ் மற்றும் ரங்காராவ் ஆகியோர் நடித்திருந்தனர். அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழிலும் அதே பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இன்று வரை கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் 70 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க போகிறார் மகேஷ் பாபு என்ற தகவல் பரவியது. ஆனால் அதை மகேஷ் பாபு தரப்பு மறுத்துள்ளது. காரணம் மகேஷ்பாபு ஒருபோதும் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை கொண்டவர் என்பதுதானாம்.