மைனர் சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து தவறான காரியங்களில் ஈடுபடுத்திய கும்பல்! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (17:00 IST)
சென்னையில் மைனர் சிறுவன் ஒருவனுக்குப் பயிற்சி கொடுத்து அவனை செயின் பறிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர் இருவர்.

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்யும் அந்த பெண் பணியை முடித்துவிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தெருவில் தன்னை பின் தொடர்வது போல தோன்றவே திரும்பி பார்த்துள்ளார் அந்த பெண். அப்போது சிறுவன் ஒருவன் அவர் மேல் பாய்ந்து அவர் கழுத்தில் இருந்த செயினைப் பறித்துக் கொண்டு சென்றுள்ளான்.

இது சம்மந்தமாக அந்த பெண் புகார் கொடுக்க, சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போலிஸார், அந்த சிறுவனைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவனுக்குப் பயிற்சி அளித்து நகைப் பறிப்பில் ஈடுபடுத்திய விஜய், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்