கழிவறையில் இருக்கும் பெண்ணை வீடியோ எடுத்த டிக்கெட் பரிசோதகர்!

சனி, 19 செப்டம்பர் 2020 (12:12 IST)
சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸில் வந்த பெண்ணை டிக்கட் பரிசோதகர் கழிவறையில் இருக்கும் போது வீடியோ எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பிரபல கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்துவருகிறார் அந்த மாணவி. அவர் லாக்டவுன் காரணமாக அந்த விடுதியை காலி செய்துவிட்டு சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார். அப்போது சென்னையை நெருங்கிய போது கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது ஜன்னல் வழியே யாரோ தன்னை வீடியோ  எடுப்பதைக் கவனித்த அந்த பெண், உடனடியாக வெளியே வந்து அவரைப் பிடித்துள்ளார். பின்னர் அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்தவர்கள் உதவியோடு ரயில்வே போலிஸில் புகார் கொடுக்க விசாரணையில் அவர்தான் அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் என்பது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த 26 வயதான மேகநாதன் என்கிற அவர் செல்போனில் அந்த பெண்ணை எடுத்த வீடியோ இருக்கவே அதைப் போலிஸார் டெலிட் செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்