கரூரில் குளிர் சாதன பேருந்துகள் ...அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் !

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (21:33 IST)
கரூரில் முதன்முறையாக இரண்டு நகர குளிர்சாதன பேருந்துகளும் வெளியூர்களுக்கு 6 புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளும் தமிழக  போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர் பேருந்து நிலையத்தில் இரண்டு குளிர்சாதன நகரப்பேருந்து பேருந்துகளும், 6 புதிய பேருந்துகளும், போக்குவரத்து தொழிலாளர்கள் 17 பேருக்கு பதவி உயர்வு ஆணையும் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில்  கரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

சென்னையை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இரண்டு புதிய நகர பேருந்துகள் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து குளித்தலை மற்றும் வேலூருக்கும், கொடைக்கானல் ஏற்காடு பொள்ளாச்சி கும்பகோணம் ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு 6 புதிய வழிதடத்தில் புதிய பேருந்துகளையும் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  

மேலும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போர் மேன்,  ஓட்டுநர், போதகர், தினக்கூலி ஓட்டுநர்கள், தினக்கூலி நடத்துனர்கள் ஆகிய 17 பேருக்கு பதவி உயர்வு ஆணையையும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்