சென்னையில் மழைநீர் பணிகள்.. அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் உதயநிதி..!

Mahendran
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (18:12 IST)
சென்னையில் மழை நீர் பணிகள் கடந்த ஏழு மாதமாக ஏன் நடைபெறவில்லை என அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் மாநகராட்சி குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் இந்த கூட்டத்தில் 7 அமைச்சர்கள் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர் என்று கூறப்படுகிறது.
 
குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை, கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும்? என அதிகாரிகளிடம் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதேபோல் அமைச்சர் கே.என். நேரு, ‘அதிகாரிகளுக்கு சிரமம் இருந்தால் சொல்லுங்கள், அமைச்சர்களாகிய  நாங்கள் இருக்கிறோம், தீர்வு கொடுக்கிறோம். ஆரம்பித்துவிட்டோம், முடிப்போம்னு சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. மழை வந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது’ என ஆவேசமாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
 
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர்களுடம் மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்