ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கு தான் வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜி!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:25 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் நாங்கள் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் பாருங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
 இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என பொருத்திருந்து பாருங்கள் என்றும் முதலமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் இந்த சட்ட மசோதாவை நமது முதலமைச்சர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஏப்ரல் மாதம் வாட்ச் பில்களை தருகிறேன் என அண்ணாமலை கூறுகிறார் என்றும் கையில் பில் இருந்தால் கொடுக்க வேண்டியதுதானே எதற்காக ஏப்ரல் மாதம் வரை காலக்கெடு என்றும் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்