அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (07:43 IST)
சட்டவிரோத பணப்பறிமாற்றம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாகத்துறை அதிகாரிகளால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்த வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில்  கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அவர் வழக்கில் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அதனால் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். 
 
ஆனால் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் வாதாடப்பட்டது. இரு தரப்பின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இன்றைய தீர்ப்பில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்