ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:49 IST)
ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை என்றும் சனாதனத்தின் சில கொள்கைகளை மட்டுமே எதிர்க்கின்றோம் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தபோது அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு கலந்து கொண்டனர்.
 
 இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அகில இந்திய அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 
 
இந்த நிலையில் இதே மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு இது குறித்து கூறிய போது ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை என்றும் சனாதனத்தின் சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.  
 
மேலும் என் மண் என் மக்கள் பயணம் தோல்வி அடைந்ததால் அண்ணாமலை குழம்பி போய் உள்ளார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்