வார்டு உறுப்பினர்களிடம் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்த கூட்டுறவுத்துறை அமைச்சர்!

J.Durai
புதன், 17 ஜூலை 2024 (16:28 IST)
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் ஆகியோர் வருகை தந்தனர்.
 
நகர் மன்ற தலைவர் துரை. ஆனந்த்  நகர மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன்மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் அமைச்சரைமாலை அணிவித்து வரவேற்றனர்.
 
பின்னர் அமைச்சர் நகர மன்ற தலைவர் மற்றும்வார்டு உறுப்பினரிடம் சிவகங்கை நகரில் நடக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
 
பின்னர் நகர மன்ற தலைவர் சிவகங்கை நகரில்  செயல்படுத்தப்பட உள்ளசிவகங்கை தொண்டிச் சாலையில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்,விடுபட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை துவக்குதல், நகர் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்தல் போன்ற வேறு திட்ட பணிகளுக்கு முழு நிதி ஒதுக்கீடு செய்ய நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் துறைக்குஅனுப்பப்பட்டுள்ள மனுகுறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்